ஸ்தோத்திரிப்பேன் ஜீவன் எனக்களித்ததால்
கீர்த்தனைகள் என்னென்றும் பாடிடுவேன்
கடந்த நாட்களில் கண்மணிபோல
கருத்துடன் காத்தவரை - ஸ்தோத்
1. எந்தன் பாவ பாரமதை
சிலுவையில் சுமந்து தீர்த்தாரே
நாவிலே புதிய பாட்டுதந்து - ஸ்தோத்
2. எந்தன் வாஞ்சை இயேசு அல்லவோ
அவர் மகிமையே என் மேன்மையே
மறுரூபமாக்க ஆவியினாலே
நிரப்பினாரே கிருபையால் -ஸ்தோத்
3. எந்தன் கண்ணீர் அவர் துடைப்பார்
கர்த்தரின் மார்பதில் சார்ந்திடுவேன்
மேகமதில் இயேசு தோன்றும் போது
அவரிடம் சேர்ந்திடுவேன் - ஸ்தோத்
HOME
More Songs